டெல்லியில் நாளை (ஜூன் 11) நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும், இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
இதனையடுத்து, இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 10) காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் நேரில் சந்திக்கிறார்.அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்துப் பேசுவுள்ளார்.
தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரண்டாம் முறை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய் 3 நாட்கள் அங்கு இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
