சிறந்த பாரம்பரியத்தை வெளிகொணரும் ஷிச்சின்பிங்கின் வட கொரிய பயணம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வட கொரியாவில் ஜூன் 8,9 ஆகிய நாட்களில், அரசு முறை பயணம் மேற்கொண்டார். இது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறை அமைச்சர் லியூ ஹைய்சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வட கொரியாவில் அரசு முறை பயணத்தின் போது, ஷிச்சின்பிங்கும் வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜொங் உன்னும், இரு தரப்புறவின் வளர்ச்சி திட்டம் குறித்து கூட்டாகக் கலந்தாய்வு செய்தனர். மேலும், இரு நாடுகளின் சோஷலிய இலட்சியத்தின் அருமையான எதிர்காலத்தை விவாதித்து, பல முக்கிய ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர் என்றார்.

ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வெற்றி பெற்றுள்ளது என்றும், முக்கிய பலன் தந்துள்ளது என்றும் லியூ ஹைய்சிங் தெரிவித்தார்.

முதலில், இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் அதியுயர் தலைவர்களின் வழிகாட்டலில், சீன-வட கொரிய உறவை காலத்திற்கு ஏற்ப முன்னேற்று வருவதற்கான திசை உறுதிப்படுத்தப்பட்டது.

2ஆவதாக, பல்வேறு துறைகளிலுள்ள பயனுள்ள ஒத்துழைப்புகள் மற்றும் நட்பார்ந்த பரிமாற்றத்தை ஆழமாக்கி, இரு நாடுகளின் சோஷலிய இலட்சியத்திற்கு இப்பயணம் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வந்துள்ளது.

3ஆவதாக, யுகத்தின் ஓட்டம் மற்றும் வரலாற்று முன்னேற்றப் போக்கைக் கைபிடித்து, பிராந்திய மற்றும் உலகின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் நேர்மறை சக்தி வழங்க இரு நாடுகள் பாடுபடும் என்றார்.

You May Also Like

More From Author