தீவிரமடைந்துள்ள மத்திய கிழக்கு நிலைமை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் ஜூன் 10ஆம் நாள் கூறுகையில், தற்போதைய ஈரான் நிலைமை குறித்து சீனா கவலைப்படுகிறது என்று கூறினார். தொடர்புடைய பல்வேறு தரப்புகளும் கட்டுபாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு, தற்போதைய நிலைமையைத் தணிவு செய்யும் வகையில் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசியல் மற்றும் தூதாண்மை முறையில் சர்ச்சைகளை தீர்க்கும் வழியில் நிலைத்து நின்று, நிரந்தர போர்நிறுத்தத்தை வெகு விரைவில் நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
