சீன அரசு 9ம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 5 திங்கள் காலத்தில், சீனச் சரக்குகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, 20.68 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15.3 விழுக்காடு அதிகரித்து, நிலையான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தியுள்ளது.
நிலையான வர்த்தக அளவைத் தவிர, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் கட்டமைப்பும் சீராக முன்னேறியுள்ளது. இக்காலக்கட்டத்தில் உயர் தொழில் நுட்பம் மற்றும் கூடுதல் மதிப்புள்ள மின்சாரப் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.4 விழுக்காடு அதிகம். செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, 50 விழுக்காட்டைத் தாண்டி அதிகரித்துள்ளது. தொடர்ந்து மேம்பட்டு வரும் சீன வெளிநாட்டு வர்த்தகக் கட்டமைப்பு, தொழில் புத்தாக்க ஆற்றல் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிலைமையின்படி மாறும் ஆற்றலை வெளிக்காட்டுகிறது.
உலகின் தொழிற்சாலை மட்டுமன்றி, உலகின் சந்தையாகவும் மாற சீனா விரும்புகிறது. இவ்வாண்டில் “பகிர்வு சந்தை·சீனாவுக்கு ஏற்றுமதி”என்ற தொகுதியிலான பல நிகழ்ச்சிகள் சீனாவில் நடைபெற்றுள்ளன. அவை, உலகின் தரமுள்ள வணிகப் பொருட்கள் சீனச் சந்தைக்குள் நுழைவதை ஈர்த்துள்ளன.
வெளிநாட்டு வர்த்தகம், சீனப் பொருளாதாரத்தை நோக்கும் ஒரு முக்கிய சன்னலாகத் திகழ்கிறது. அண்மையில், மோர்கன் ஸ்டேன்லி, டொஸ்ச் வங்கி முதலிய பல சர்வதேச முதலீட்டு வங்கிகள், 2026ம் ஆண்டு சீன உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சிக்கான மதிப்பீட்டை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
படம்:VCG
