சீனாவில் பயணம் மேற்கொண்ட ஸ்லோவாக்கிய தலைமை அமைச்சர் ரோபெர்ட் ஃபிசோ சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிலையத்துக்குப் பேட்டியளித்தார்.
ஸ்லோவாக்கிய மக்களுக்கு 15 நாட்கள் விசா நீக்கக் கொள்கையை அறிவித்த சீனாவுக்கு நன்றி தெரிவித்த அவர், ஸ்லோவாக்கியா-பெய்ஜிங் நேரடி விமான போக்குவரத்து திறப்பதைக் கருத்தில் கொண்டு வருவதாகக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தனது சீனப் பயணம், இவ்வாண்டின் மிக முக்கிய பயணமாகும். இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்கான பரந்த எதிர்காலம் உள்ளது. சீனாவின் மின்சார வாகனங்களின் மீது ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் சுங்க வரியை அதிகரிப்பது, பகுத்தறிவு இல்லாத செயலாகும். ஐரோப்பாவின் மதிப்பு குறித்த கருத்தை சீனா மதிக்கிறது.
அதை போல, வளர்ச்சி பாதையை சீனா சொந்தமாக தேர்ந்தெடுக்கும் உரிமையை ஐரோப்பாவும் மதிக்க வேண்டும். ஒத்துழைப்பு மூலம் வெற்றி பெறுவோம். இது தான், உலகின் எதிர்கால வளர்ச்சி திசையாகும் என்றும் வலியுறுத்தினார்.