சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜூலை 30ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க-சீன வர்த்தக அமைப்பின் இயக்குநர்கள் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் வழிகாட்டலின்படி, பரஸ்பரம் மதிப்பளித்தல், பஞ்ச சீலக் கோட்பாடுகள், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி இரு நாட்டுறவைச் சீனா சமாளித்து முன்னேற்றும் என்று வாங்யீ தெரிவித்தார்.
அமெரிக்க-சீன உறவை மேலும் வலுவான சமநிலை மற்றும் ஒன்றுக்கொன்று நலன் தரும் திசையை நோக்கி வளர்வதை முன்னேற்ற விரும்புவதாக அமெரிக்க-சீன வர்த்தக அமைப்பின் இயக்குநர்கள் குழு தெரிவித்துள்ளது.