போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார்.
“போரோ, மோதல்களோ, பயங்கரவாத தாக்குதல்களோ எதுவாக இருந்தாலும், மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் உயிர் பலி ஏற்படும் போது வேதனை அடைகிறார்கள்.
ஆனால், அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது, அப்பாவி குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது, மனதைக் கனக்கச் செய்கிறது
, அந்த வலி மிக பெரியது. இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுடன் விவாதித்திருக்கிறேன்,” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.