சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இவ்வாண்டின் டிராகன் படகு விழாவின் போது, சீனாவின் சுங்கச் சாவடி நிலையங்கள் 59 இலட்சத்து 7 ஆயிரம் பயணிகளுக்குச் சேவை வழங்கியது.
இக்காலத்தில் நாள்தோறும் சுமார் 19 இலட்சத்து 69 ஆயிரம் எல்லை கடந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது, கடந்த ஆண்டின் இவ்விழாவில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களை விட 2.7 விழுக்காடு அதிகமாகும். விசா விலக்கு கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 31 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 59.4 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.