31ஆவது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி ஜுலை 28ஆம் நாள் சீனாவின் செங்து நகரில் துவங்கியது. அதேநாள் நடைபெற்ற வரவேற்பு விருந்தில், விளையாட்டுப் போட்டி மூலம் ஒற்றுமையை வலுப்படுத்தி, சர்வதேச சமூகத்துக்கு நேர்மறை ஆற்றலைத் திரட்டி, உலகளாவிய சவால்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.
விளையாட்டு, மக்களுக்கிடையே நட்புறவை மேம்படுத்தும் ஆற்றலாகும். பல்கலைக்கழக போட்டியின் அறிக்கை மற்றும் நோக்கம், இவ்விளையாட்டுப் போட்டிக்கு அகத்தூண்டலை வழங்குவதோடு, தற்போதைய பல்வகை மாற்றங்களைச் சமாளிப்பதற்கு பயனுள்ள அனுபவங்களையும் வழங்கியுள்ளது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
மனிதர்கள் ஒற்றுமையுடன் உலகளாவிய அறைகூவலைச் சமாளிக்க வேண்டும். மாறி வரும் நிலைமை மற்றும் யுகத்தின் கேள்விகளுக்கு, வரவேற்பு விருந்தில் ஷி ச்சின்பிங் பதிலளித்தார். விளையாட்டு போட்டி மூலம் ஒற்றுமையை மேம்படுத்தி, சர்வதேச சமூகத்தின் நேர்மறை ஆற்றலைத் திரட்ட வேண்டும். ஒற்றுமையுடன் காலநிலை மாற்றம், உணவு நெருக்கடி, பயங்கரவாதம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சமாளித்து, ஒத்துழைப்பு மூலம் அருமையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது ஒற்றுமையின் நோக்கமாகும். உலக இளைஞர்கள் மீது ஷி ச்சின்பிங் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார். இளைஞர்கள் சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை மற்றும் நட்பார்ந்த கண்ணோட்டத்தில் வண்ணமயமான உலகம் மற்றும் பல்வகை நாகரிகங்களைப் பார்த்து, இளமையான உயிராற்றலின் மூலம் உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
விளையாட்டுப் போட்டி மூலம் ஒற்றுமையை முன்னேற்ற வேண்டும்:ஷி ச்சின்பிங் வேண்டுகோள்
