தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Estimated read time 0 min read

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி என தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழகத்தின் மொத்த கடனளவு 13.18 லட்சம் கோடியாக உள்ளதாகவும், ஒவ்வொரு தனிநபரின் மேலும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாய் கடன் சுமை உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருமடங்காக கடன் சுமையை உயர்த்தியுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை 78 ஆயிரத்து 234 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author