செப்டம்பர் 9 அன்று வேட்டையன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்  

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இது அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 9 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், மனசிலாயோ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலின் சில வரிகளை பாடகர் பாடுவதுபோல் வெளியிட்டு, அதை பாடியது யார் என கண்டுபிடிக்குமாறு லைகா புரடக்ஷன்ஸ் கேட்டுள்ளது.

You May Also Like

More From Author