மேலும் நேர்மையான நியாயமான உலகளாவிய ஆட்சிமுறை அமைப்புமுறைமையை உருவாக்குவது பற்றிய சீனாவின் கொள்கைகள், முன்மொழிவுகள் மற்றும் செயல்கள் என்ற வெள்ளையறிக்கையை சீனா 17ஆம் நாள் வெளியிட்டது.
இது, உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவின் காலப் பின்னணியை முறைமையாக விளக்கி கூறி, உலகளாவிய ஆட்சிமுறை அமைப்புமுறையின் சீர்திருத்தம் மற்றும் கட்டுமானத்தில் சீனா பங்கெடுத்த அனுபவங்களைப் பன்முகங்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய ஆட்சிமுறை பற்றி சீனாவின் இலக்கு, நிலைப்பாடு, திட்டம் ஆகியவற்றை இது மேலும் தெளிவுபடுத்தி, சர்வதேசச் சமூகம் உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவின் பயனை மேலும் புரிந்து கொள்வதற்குத் துணை புரியும்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவை முன்வைத்து, இறையாண்மை சமத்துவத்தைக் கடைப்பிடிப்பது, சர்வதேசச் சட்ட ஒழுங்கைப் பின்பற்றுவது, பலதரப்புவாதத்தைக் கடைப்பிடிப்பது, மனித முதன்மையை வலியுறுத்துவது, செயல் சார்ந்த அணுகுமுறையில் கவனம் செலுத்துவது ஆகிய 5 மையக் கருத்துகளை வழங்கினார். எந்த வகையான உலகளாவிய ஆட்சிமுறை அமைப்புமுறையைக் கட்டியமைப்பது, உலகளாவிய ஆட்சிமுறையை எப்படி மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு பதிலளிப்பதற்குரிய சீனாவின் கருத்துகளை இது வழங்கியுள்ளது.
உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவைச் செயல்படுத்துவதன் அடிப்படை, ஐ.நாவின் அதிகாரம் மற்றும் தகுநிலையை உறுதியாகப் பேணிக்காப்பது ஆகும்.
காலத்திற்கு ஏற்ப முன்னேறி, ஐ.நாவின் சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, ஐ.நா பாதுகாப்பவையைத் தவிர்க்கும் ஒரு சார்பான செயலைக் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று சீனா கருதுகிறது.
அதே வேளையில், ஐ.நா பாதுகாப்பவையின் சீர்திருத்தத்தில், வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமையை அதிகரிக்க வேண்டும் என்று சீனா எப்போதும் வேண்டுகோள் விடுத்து வருகின்றது.
இப்பின்னணியில் சர்வதேசச் சமூகத்தின் பொது நலன் ஒன்றே உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவின் இலக்கு ஆகும். இதற்குச் சர்வதேச சமூகத்தின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.
