அமெரிக்காவும்
ஈரானும் புரிந்துணர்வு குறிப்பாணையை உருவாக்கியதையடுத்து, 3 மாதங்களுக்கும்
அதிகமான காலத்தில் நீடித்துள்ள அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதல் தணிவடையவுள்ள
வாய்ப்பைக் காட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை சுற்றியுள்ள இந்த நிலையான போர்
அமெரிக்காவுக்கு எதிர்பார்க்கப்பட்ட நலனைக் கொண்டு வரவில்லை. அமெரிக்க அரசு அதன்
திட்டமிட்ட நெடுநோக்கு இலக்குகளை நனவாக்கவில்லை என்று 90.8விழுக்காட்டினர்
கருதுவதாக உலக இணையப் பயனர்களிடையில் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம்
நடத்திய கருத்து கணிப்பு நன்று காட்டியுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்
பிரச்சினையிலும், ஈரான் பிரச்சினையிலும் அமெரிக்கா கவிழ்க்கும் கொள்கைகளை
மேற்கொள்வது மத்திய-கிழக்கு பிரதேச நிலைமை பதற்றமாகிய முக்கிய காரணமாகும் என்று 93விழுக்காட்டினர்
தெரிவித்தனர். மேலும், இப்பிரதேசத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்துள்ளதை
இந்த மோதல் தீவிரமாக்கியுள்ளதாகவும் 93.4விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
