சீனத் தேசிய மின்னணு வணிகக் கூட்டம் சமீபத்தில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, சீனாவின் ஒட்டுமொத்த எண்ணியல் நுகர்வு அளவானது 23 இலட்சத்து 8 ஆயிரம் கோடி யுவானாகும். இதனையடுத்து உலகில் மிகப்பெரிய இணையவழிச் சில்லறை விற்பனை சந்தை என்னும் தகுநிலையைச் சீனா 13 ஆவது ஆண்டாகத் தக்க வைத்துள்ளது.
14ஆவது ஐந்தாண்டு திட்டம் முதல் இது வரை, சீனாவின் மிண்ணணு வணிகத் துறையின் உயர் தர வளர்ச்சி ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெற்று வந்துள்ளது. இத்துறையானது புதிய ரக உற்பத்தி உந்து ஆற்றலை வளர்த்து, புதிய வளர்ச்சிக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான தரவுகளின்படி, எண்ணியலையும் நிறுவனங்களையும் தொடர்ந்து ஒருங்கிணைப்பது என்பது முக்கியம். 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் நடைபெற்ற 1500க்கும் மேலான மின்னணுத் தொழில் நுட்பக் கண்காட்சிகளில் பத்தாயிரத்திற்கும் மேலான நிறுவனங்கள் கலந்துகொண்டன. இது, பாரம்பரியத் தொழில் துறையைத் தீவிரமாக்கி, நேரடியாகவும் இணைய வழியிலும் தொழில் மேம்பாட்டை முன்னெடுத்துள்ளது.
வெளிப்புறச் சுற்று சூழலில் உறுதிப்பாடற்ற காரணிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் பின்னணியில், வெளிநாட்டுத் திறப்பு ஒத்துழைப்புகள் மூலம், கூட்டு நலன்கள் பெறப்பட்டுள்ளன. இதனிடையில் தற்போது வரை சீனாவின் பட்டுப் பாதை மின்னணு எனும் முன்மொழிவில் இணைந்துள்ள கூட்டாளி நாடுகளின் எண்ணிக்கை 36 ஐ எட்டியுள்ளது. அதோடு, முன்மாதிரி மண்டலக் கட்டுமானப் பணியும் தடையின்றி முன்னேறி வருகிறது. உலகத்திற்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளின் மூலம், சீனாவில் பெரிய மின்னணு சந்தையில் கலந்துகொள்ளலாம்.
சமூக நலன்களைப் பொருத்தவரை, மின்னணு தொழில் துறையில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை 7 கோடியே 80 இலட்சமாகும். 14ஆவது ஐந்தாண்டு முதல் இது வரை, மின்னணு வணிகத்தின் மூலம், விரைவு அஞ்சல் சேவை அளவு சராசரியாக ஆண்டுக்கு 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், மேகக் கணிமை, பெருந் தரவுகள் முதலிய மென்பொருட்களின் சேவைகளும் பெரிதும் உயர்ந்துள்ளன.
