ஷிச்சின்பிங்கிற்கு அவரது தந்தை ஷிச்சொங்சுன் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அவர்கள் இருவரும் விவசாயிகளாக வேலை செய்திருக்கின்றனர். அவர்களின் மனதில் எப்போதுமே முதலிடத்தில் பொது மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படங்களில் இரு தலைமுறைகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களான அவர்களின் மாறாத ஆரம்பக் குறிக்கோள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, 50க்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்புக்கான ஆய்வுப் பணிப் பயணங்களை மேற்கொண்ட ஷிச்சின்பிங், நாடு முழுவதும் உள்ள 14 வறுமை நிறைந்த பகுதிகளுக்குச் சென்றுள்ளார்.
அரசியல் துறையில் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய ஷிச்சின்பிங்கிடம் ஷிச்சொங்சுன் கூறுகையில், எவ்வளவு உயர்வான பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவைப் புரிவதை மறக்க கூடாது என்று தெரிவித்தார்.
வேறுபட்ட காலக்கட்டத்தில் வாழும் ஷிச்சொங்சுன், ஷிச்சின்பிங் ஆகிய இருவரும், மக்களுக்கு தன்னை அர்ப்பணிக்கும் விசுவாசத்தைக் கொண்டுள்ளனர். மக்களின் தலைவர் முதல் மக்களுக்கான சேவையாளர் வரை, அவர்கள் சொந்த செயல்களின் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியை நிலைநாட்டியுள்ளனர்.
