இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கால அட்டவணையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், இங்கிலாந்தில் அடுத்த பொதுத்தேர்தலை நடத்தாமலேயே, ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க வழிவகை ஏற்படும் எனத் தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மேக்கர்ஃபீல்டு இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு திரும்பியுள்ள ஆண்டி பர்ன்ஹாம், அடுத்த பிரதமர் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார்.
எனினும், அவர் பிரதமராவதற்கு பல அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியான வழிமுறைகளைக் கடக்க வேண்டியுள்ளது.
பொதுத்தேர்தல் இன்றி இங்கிலாந்திற்கு புதிய பிரதமர்? கீர் ஸ்டார்மர் இன்று விலக முடிவு
