அன்னிய முதலீட்டுக்கு ஊக்கம் அளிக்கும் 15 நடவடிக்கைகளை முன்வைத்த சீனா

Estimated read time 0 min read

அன்னிய முதலீட்டுக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகள் பற்றிய திட்டம் ஒன்றை சீன வணிக அமைச்சகம் 22ஆம் நாள் வெளியிட்டது.

சேவைத் துறை, நிதித் துறை, மருத்துவத் துறை முதலியவற் குறித்து, சந்தை நுழைவுக்கு அனுமதியை விரிவாக்குவது, அன்னிய முதலீட்டுக்கான வசதித் தன்மையை உயர்த்துவது, முதலீட்டு முன்னேற்ற நிலையை அதிகரிப்பது, அன்னிய முதலீட்டுக்கான சேவை உத்தரவாத முறைமையை முழுமையாக்குவது, அன்னிய முதலீட்டுக்கான மேலாண்மையை மேம்படுத்துவது ஆகிய 5 துறைகளில் 15 நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் முதலீடு என்ற நடவடிக்கையை முன்னேற்றுவது, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் நுகர்வை முன்னேற்றும் நடவடிக்கைகளில் கலந்து கொள்வது, முக்கிய அன்னிய முதலீட்டுத் திட்டப்பணிக்கான சேவையையும் உத்தரவாதத்தையும் வலுப்படுத்துவது முதலியவை பற்றி சில திட்டவட்டமான நடவடிக்கைகள் இத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author