சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 4ஆவது கூட்டம்
சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 4ஆவது கூட்டம் பிப்ரவரி 19ஆம் நாள் மாலை நடைபெற்றது.
சீன அரசுத் தலைவரும் சீர்திருத்தத்தைப் பன்முகங்கிலும் ஆழமாக்குவதற்கான மத்திய ஆணையத்தின் இயக்குநருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய போது வலியுறுத்துகையில், ஒட்டுமொத்த கொள்கை மற்றும் பிரதேச வளர்ச்சியுடன் மேலும் பயனுள்ளதாக ஒன்றிணைந்த நில மேலாண்மை அமைப்பு முறையை உருவாக்க வேண்டும்.
சாதகமான பிரதேசத்தின் உயர் தர வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதற்கான நில வளத்தின் திறனை வலுப்படுத்த வேண்டும் என்றார். மேலும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பன்முக பசுமையான வளர்ச்சியை முன்னேற்றுவது தான் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படைக் கொள்கையாகும்.
அவசர நிலைக்கான அடிமட்ட கட்சிக் குழுக்களின் நிர்வாக திறனை மேலும் உயர்த்த வேண்டும். சீர்த்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி முன்னேறும் வழியில் இடர்பாடு மற்றும் அறைக்கூவலைச் சமாளிப்பது நடப்பு ஆண்டின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்தார்.