செப்டம்பர் 11 முதல் 13ஆம் நாள் வரை மூன்று நாட்களில் மட்டும், தென் சீன கடல் விவகாரம் குறித்து சீனா-பிலிப்பைன்ஸ் இடையேயான இரு தரப்பு கலந்தாய்வு முறைமையின் குழுத் தலைவர்கள் சந்திப்பு, 11ஆவது சியாங்ஷான் மன்றக்கூட்டம், தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சீனா மற்றும் ஆசியான் நாடுகளிடையேயான 22ஆவது உயர் அதிகாரிகள் கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்று, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து கூட்டங்களிலும் தென் சீனக் கடல் விவகாரம் குறித்து சேர்க்கப்பட்டதோடு, ஒரு பொதுவான தகவலும் வெளியிடப்பட்டது.
அதாவது, பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்த்து, தென் சீன கடலின் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பது, அந்தந்த பிராந்தியத்தின் பொதுவான எதிர்பார்ப்பாகவும், பிராந்தியத்தின் நலன்களுக்கு அதிகபட்சமாக ஏற்றதாகவும் உள்ளது.