தென்கொரியாவின் கியொங்ஜுவில் நவம்பர் முதல் நாள் நடைபெற்ற 32வது ஏபெக் உச்சிமாநாட்டின் தலைமை பொறுப்பை ஒப்படைத்த நிகழ்ச்சியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கெடுத்து, 33வது ஏபெக் உச்சிமாநாடு, 2026ம் ஆண்டின் நவம்பர் திங்கள் குவாங் டுங் மாநிலத்தின் ஷென் ச்சேன் நகரில் நடைபெறுவதாக அறிவித்தார்.
இவ்வுச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் 2 முறை உரை நிகழ்த்தி, ஆசிய-பசிபிக் பொருளாதாரத்துக்கு 5 முன்மொழிவுகளை முன்வைத்தார். எண்ணியல் மற்றும் நுண்ணறிவின் பங்கை வலுப்படுத்தி, பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சியில் ஊன்றி நின்று, கூட்டாக பயனடைந்து, சகிப்புதன்மை வாய்ந்த ஆசிய-பசிபிக் வளர்ச்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இவை திறப்பு தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தைக் கட்டியமைக்கும் சீனாவின் மனவுறுதியைக் காட்டியுள்ளன.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 15வது ஐந்தாண்டு திட்டம் குறித்த ஆலோசனையின்படி, சீனா, தொடர்ந்து சீர்திருத்தத்தை ஆழமாக்கி, உயர்நிலை வளர்ச்சியை முன்னெடுக்கும். இது, ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகிற்குப் புதிய வாய்ப்புகளை விளைவிக்கும். அடுத்த ஆண்டில் ஷென் ச்சேன் உச்சிமாநாடு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செழுமையை முன்னேற்றும். அதே வேளையில் சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் புதிய சாதனைகளின் மூலம், சீனா தொடர்ந்து புதிய வாய்ப்புகளை வழங்கவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம்:VCG
