சாலை, ரயில்வே, விமானம் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட முறைகளை ஒருங்கிணைக்கும் சீனாவின் விரிவான பல்வகை போக்குவரத்து வலையமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அபார வளர்ச்சியடைந்துள்ளது என்று சீனாவின் போக்குவரத்து துறை அமைச்சர் லீ சியோபெங் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, 60 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கும் மேலான விரிவான பல்வகை போக்குவரத்து வலையமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு முதல் மேற்கு வரையிலும் வடக்கு முதல் தெற்கு வரையிலும் இயங்கும் விரிவான போக்குவரத்து வழித்தடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று லீ சியோபெங் கூறினார்.