உலக அளவிலான கலாசாரப் பாரம்பரியமான பொத்தலா மாளிகை, உலகளவில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டு, மிக முழுமையாக பாதுகாக்கப்பட்ட அரண்மனை கட்டிடமாகும். சீனாவின் பல்வேறு தேசிய இனங்கள் பரிமாற்றம் மற்றும் ஒன்றிணைப்புக்கான வரலாற்றுச் சாட்சியாகவும் அது திகழ்கிறது. பொத்தலா மாளிகையின் நீண்ட வரலாற்றில், அரசியல், மதம், கலாசாரம், கலை உள்ளிட்ட கூறுகள் பின்னிப்பிணைந்து, பல புராணக்கதைகளை உருவாக்கியுள்ளன.
சீன ஊடகக் குழுமம் சிட்சாங் ஒளிபரப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த பொத்தலா மாளிகை எனும் ஆவணப்படம், ஜூன் 23 முதல் 29ஆம் நாள் வரை மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் சீன மொழி சர்வதேச சேனலிலும், இந்த ஆவணத்தின் ஆங்கில பதிப்பு ஜூலை 3 முதல் 9ஆம் நாள் வரை சிஜிடிஎன் ஆங்கில சேனலிலும் ஒளிபரப்பாக உள்ளது.
7 பகுதிகளைக் கொண்ட இந்த ஆவணப்படம், சிட்சாங், தாய்நாட்டுடன் பொது எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரலாற்றை முழுமையாக வெளிப்படுத்துவதோடு, ஒவ்வொரு வம்சக்காலத்திலும் சிட்சாங் மீதான மத்திய அரசின் நிர்வாகத்தையும் கூறுகிறது. சிட்சாங்கில் மத நம்பிக்கை சுதந்திரத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பளித்து, தேசிய இனக் கலாசார பாதுகாப்பு கொள்கையை மேற்கொள்வதன் மூலம், வளர்ச்சிக்கான உரிமை நலன்களை சிட்சாங் மக்கள் அனுபவிக்கும் உண்மையையும் புதிய காலத்தில் சிட்சாங்கின் புதிய தோற்றத்தையும் இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது.
