கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத இதர கட்சியினர்களுடன் ஷிச்சின்பிங் வசந்த விழா வரவேற்பு

 

சீனப் பாரம்பரிய திருவிழா வசந்த விழாவின் வருகையை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 11ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத இதர கட்சிகளின் மத்திய கமிட்டி, தேசிய தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பின் தலைவர், கட்சி சாரா பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து வசந்த விழாவைக் கூட்டாக வரவேற்றார். அவர்களுக்கு ஷிச்சின்பிங் வணக்கத்தையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத இதர கட்சிகளும், தேசிய தொழில் மற்றும் வணிகக் கூட்டமைப்பும், கட்சி சாரா பிரதிநிதிகளும் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு ஆற்றி புதிய சாதனைகளைப் படைக்க வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author