சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிநாட்டு விவகார அலுவலக இயக்குநருமான வாங்யி 23ஆம் நாள் புதுதில்லியில் பிரிக்ஸ் நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உயர்நிலைப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், பாரம்பரியமற்ற பாதுகாப்பு அறைகூவல்களைச் சமாளிப்பது, பயங்கரவாத எதிர்ப்பு, இணையதளப் பாதுகாப்பு முதலியவை பற்றி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறையின் தனிச்சிறப்பான பங்கு மற்றும் தெளிவான சாதனைகளை பல்வேறு தரப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினர். உலகளவில் தென் நாடுகளின் கூட்டு நலனைப் பேணிக்காத்து, அமைதியான, பாதுகாப்பான, நியாயமான, நேர்மையான, செழுமையான, வளர்ச்சியான பலதுருவ உலகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
