2026ஆம் ஆண்டு பிரிக்ஸ் பெண்களின் தலைமைத்துவ மன்றக்கூட்டம் ஜூன் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனா, உலகளவில் மிக முக்கியமான பெண்கள் நுகர்வு சந்தையாகும். பெருமளவிலான இடைநிலை வருமானம் பெறுவோர்கள், பக்குவமடைந்த எண்ணியல் பொருளாதார அமைப்புமுறை, மேம்பட்ட மின்னணு வணிக அலுவல் மேடைகள், அதிகரித்து வருகின்ற பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் நுகர்வோர்கள் ஆகியவை, சர்வதேச ஒத்துழைப்புக்கும், சந்தை விரிவாக்கத்துக்கும் பெரும் வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்று இம்மன்றக்கூட்டத்தில் பங்கெடுத்த விருந்தினர்கள் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்காவின் மேலா நிதிக்குழுவின் தலைமைச் செயல் அதிகாரி மேலா கூறுகையில், தென்னாப்பிரிக்காவின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், பண்பாடு மற்றும் சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் அழகு பராமரிப்பு ஆகிய துறைகளில், சீனாவுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்வதற்கான பெரும் வாய்ப்புகள் உள்ளன என்றார்.
