மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
“தற்போதுள்ள அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது தொடர்பான எந்தவொரு பரிந்துரையும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை.” என்றார் அவர்.
வாழ்க்கைச் செலவைச் சரிசெய்யவும், பணவீக்கத்தால் அடிப்படை ஊதியத்தின் உண்மையான மதிப்பு குறைவதைத் தடுக்கவும், தொழில்துறைத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை அகவிலைப்படி விகிதங்கள் திருத்தப்படுகின்றன.
8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை
