இவ்வாண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி அடைந்த 80வது ஆண்டு நிறைவாகும். இந்த பின்னணியில், ஜப்பான் தலைமையமைச்சர் சனே தகைச்சி, சீனாவின் தைவான் குறித்து வெளியிட்ட கூற்று, மிகவும் மோசமானது. சீனாவின் மனப்பான்மை, சில நாட்களுக்கு முன்பு, “சீன உள்விவகாரங்களில் தலையிடுவதை உடனே நிறுத்த வேண்டும்” என்ற கூற்றை, தற்போது “அனைத்து பின்விளைவுகளுக்கு ஜப்பான் பொறுப்பேற்க வேண்டும்”என்பதாக மாறியுள்ளது. நடைமுறை எதிர்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா தயாராக இருப்பதை இது வெளிக்காட்டுகிறது.
அனைத்து பின்விளைவுகளும் என்பது, சர்வதேச சட்டம் மற்றும் பழக்கங்களுக்குப் பொருந்திய அனைத்து நடவடிக்கைகளாகும். முதலாவதாக, பல்வேறு துறைகளில் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடும். அதனையடுத்து, பொருளாதாரம், தூதாண்மை, இராணுவம் முதலிய துறைகளில் ஜப்பான் அரசுடனான தொடர்பை இடை நிறுத்தக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
