சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கடல்சார் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டுமென 11ஆம் நாள் நடைபெற்ற கடல்சார் பாதுக்காப்புப் பிரச்சினைக்கான ஐ.நா பாதுகாப்பவையின் பொதுக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி ஃபுஸிவுங் பங்கேற்று உரைநிகழ்த்திய போது வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடல்சார் சட்டத்திற்கான ஐ.நாவின் பொது ஒப்பந்தம் கடல்சார் விவகாரங்களுக்கான பன்முக சட்ட ஆவணமாகும். பிற சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களுடன் இணைந்து, நவீன கடல்சார் ஒழுங்கிற்கான ஆதாரத் தூணாக இது விளங்குகிறது. சர்வதேச சட்டத்தை அடிப்படையாக கொண்ட சர்வதேச கடல்சார் ஒழுங்கை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்துடன் இணைந்து கடல்சார் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்று அவர் கூறினார்.