டிசம்பர் முதல் நாள் உலகின் எய்ட்ஸ் நோய் தினமாகும். சீனாவில் குருதி ஏற்றுதல் மூலம் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்படும் சம்பவம் அடிப்படையில் தடுக்கப்பட்டுள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதும், ஊசி மூலம் போதை பொருட்கள் உட்செலுத்துவதன் வழி பரவுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நோயாளிகளின் சிகிச்சை பெற்ற விகிதமும் வைரஸ் தடுப்பு விகிதமும் 95விழுக்காட்டுக்கு மேல் எட்டியுள்ளது என்று சீனத் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு முறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. பரவல் நிலைமை குறைந்த நிலையில் தொடர்ச்சியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகச் சீனத் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பணியகத்தின் துணை தலைவர் சியாகாங் கூறினார்.
மேலும், உலகின் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்குச் சீனா தொடர்ந்து பங்காற்றி வருகிறது. 2030ஆம் ஆண்டு, நாடளவில் எய்ட்ஸ் தொற்று விகிதம் 0.2விழுக்காட்டுக்கு கீழ் கட்டுப்படுத்தப்படுமென இந்நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீனாவின் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
