சீனாவின் புதிய தயாரிப்புகள் உலகளவில் வரவேற்கப்படுவதற்கான காரணம்

Estimated read time 0 min read

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் மிகவும் வரவேற்கப்படும் தயாரிப்புப் பொருட்களின் பெயர் பட்டியலின் மாற்றம், சீனத் தொழிற்துறை மேம்பாட்டிற்கான பாதையைத் தெளிவாக காட்டுகிறது.

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை செயல்படுத்தப்பட்ட துவக்க காலத்தில், உழைப்பு ஆற்றலைச் சார்ந்த மற்றும் குறைந்த உற்பத்தி செலவுடைய ஆடை, வீட்டு சாமான்கள், வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனம் முதலியவை சர்வதேச சந்தையில் வரவேற்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, மின்சார வாகனம், லித்தியம் மின்கலம், சூரிய மின்கலம் ஆகியவை, ஏற்றுமதியில் சீனாவின் மேம்பாட்டுத் துறைகளாகும். தற்போது, இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு, புத்தாக்க மருந்துகள் ஆகியவை, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் புதிய மேம்பாடுகளாக மாறி வருகின்றன. “சீன தயாரிப்பு” என்ற நிலையில் இருந்து ”சீன நுண்ணறிவு தயாரிப்பாக” மாறியுள்ளது.

சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்லூரியின் பேராசிரியர் வாங் சியாவ்சோங் கூறுகையில், முழுமையான, தொடர்ச்சியான தொழிற்துறை முறைமை, ஆய்வுத் துறையில் தொடர்ச்சியான முதலீடு, மாபெரும் சந்தை முதலியவையும், சீனர்களின் கடுமையான முயற்சி மற்றும் திறப்பான ஒத்துழைப்பும், “சீன தயாரிப்பு” இடைவிடாமல் மேம்படுவதற்கான காரணங்களாகும் என்று தெரிவித்தார்.

அதே வேளையில், சீனாவின் புதிய தயாரிப்புகள் பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு புதிய நலன்களை அளித்துள்ளன. ஏஐ துறையில், சீனா திறந்த மூலநிரலை வழங்குவதில் நிலைநிறுத்துவதால், உலகளாவிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வளரும் நாடுகள் மிகவும் குறைந்த செலவில் முன்னணியிலுள்ள கணினி ஆற்றலைப் பயன்படுத்த முடியும்.

மருத்துவத் துறை பற்றி, பிரான்ஸ் நாட்டின் செய்தித்தாளான லிபரேஷன், சீனாவின் சில புற்று நோய் சிகிச்சைத் திட்டங்கள் பிரான்ஸின் மருந்து காப்புறுதி முறைமையில் சேர்ந்த பின், ஆண்டுக்கு நோயாளி ஒருவருக்கு பல பத்து ஆயிரம் யூரோ செலவைச் சிக்கனப்படுத்த முடியும் என்று செய்தி வெளியிட்டது.

சீனா ஆய்வில் ஈடுபட்ட பாகிஸ்தான் நிபுணர் சுல்தான் ஹாலி வெளியிட்ட கட்டுரையில், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் ஒரு நாட்டின் சொந்த வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய உந்து சக்தி இருப்பதை சீன பாணியுடனான நவீனமயமாக்க வளர்ச்சி நடைமுறைகள் நிரூபணமாகின்றன. இவை, திறப்பான சர்வதேச ஒத்துழைப்பைப் பயன்படுத்தி, உலகில் பல்வேறு நாடுகளுக்கு வளர்ச்சி வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author