சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 11 திங்களில் சீனாவின், பெய்ஜிங் நகரம், தியன் சின் நகரம் மற்றும் ஹெபெய் மாநிலத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை 4 இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானாகும்.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.6 விழுக்காடாக உயர்ந்தது. இது வரலாற்றில் மிக அதிகமாகும். பெய்ஜிங் மாநகரம், இப்பிரதேசத்தின் மொத்த தொகையில் 71.7 விழுக்காட்டை வகித்து, மிக அதிகமான பங்கை எட்டியுள்ளது.
இவ்வாண்டின் முதல் 11 திங்களில், இப்பிரதேசத்தின் இறக்குமதி தொகை 3 இலட்சத்து 35 ஆயிரம் கோடி யுவானாகும். இக்காலத்தில், இப்பிரதேசத்தின் ஏற்றுமதி தொகை ஒரு இலட்சத்து 25 ஆயிரம் யுவானைத் தாண்டி, 4.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
சுங்கத் துறையின் தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 11 திங்களில், சிச்சுவான் மாநிலம் மற்றும் சொங்சிங் மாநகரத்தின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை ஒரு இலட்சத்து 57 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இவ்விரு பிரதேசங்களின் மேம்பாடுகளை வலுப்படுத்தி, பெருநிலப் பகுதியில் வெளிநாட்டுத் திறப்பின் பன்நோக்கு தளமாகவும், சர்வதேச போட்டிக்கான புதிய தளமாகவும் உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.