3வது சீன-இந்திய பெருங்கடல் நீலப் பொருளாதார வளர்ச்சி ஒத்துழைப்பு மன்றக்கூட்டம்

சீனச் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸாவ் ஃபெங்தாவ் 6ஆம் நாள் கூறுகையில், 3வது சீன-இந்திய பெருங்கடல் நீலப் பொருளாதார வளர்ச்சி ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் டிசம்பர் 15,16 ஆகிய நாட்களில் யுன்னான் மாநிலத்தின் கூன்மிங் நகரில் நடைபெறவுள்ளது. பல்வேறு தரப்புகள் கடல் பற்றிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதை முன்னேற்றி, கடல் சார் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு இயக்காற்றலை ஊட்டுவது, இம்மன்றக்கூட்டத்தின் நோக்கமாகும் என்றார்.

கடல் சார் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்குவது, சீனா மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளின் கூட்டு விருப்பமாகும். இம்மன்றக்கூட்டம், தெற்குலக நாடுகளின் வளர்ச்சி ஒத்துழைப்புக்கு சீனா ஆதரவளிக்கும் நடவடிக்கை ஆகும். மேலும், இயற்கை சீற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது குறித்து, இக்கூட்டத்தில் பங்கெடுக்கும் பல்வேறு தரப்பினர் கருத்துகளைப் பரிமாற்றிக் கொள்ளவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author