இவ்வாண்டு, சீனாவின் கோடைகால நுகர்வு உலகத்தின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் பொது மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, சீனாவின் கோடைகாலப் பொருளாதாரத்தின் செழிப்பான வளர்ச்சி, சீனாவின் பெரிய அளவிலான சந்தை உலகப் பொருளாதாரத்துக்கு ஆற்றல் ஊட்டியதை வெளிப்படுத்தியுள்ளது என்று 86.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இவ்வாண்டு, மேலதிக நாடுகளின் மீது விசா இல்லாத கொள்கையை சீனா மேற்கொண்டு, சர்வதேச பயணிகளுக்கு மேலும் வசதியான பயணம் மற்றும் நுகர்வு அனுபவத்தை வழங்கியது. இது குறித்து, இவ்வாண்டின் கோடைகாலத்தில் சீனாவில் பயணம் மேற்கொள்ள விரும்புவதாக 74.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
மேலும், சீனாவின் காற்று பதனாக்கி, மின் விசிறி, பனிக்கட்டி தயாரிக்கும் இயந்திரம், சூரிய ஒளி தடுப்புப் பொருட்கள் முதலியவை வெளிநாட்டுச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சீனத் தொழில் நிறுவனங்கள், புத்தாக்கச் சாதனைகளை, உலகச் சந்தையில் போட்டியிடும் திறனாக மாற்றி வருகின்றன. இது குறித்து, சீனாவின் கோடைகாலப் பொருளாதாரம், உள்நாட்டு நுகர்வை முன்னேற்றியதுடன், உலக உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலிக்கும், உலகப் பொருளாதாரத்துக்கும் மேலதிக உறுதித்தன்மை மற்றும் புதிய உயிராற்றலை ஊட்டி வருகிறது என்று 88.2 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
