மாநிலங்களவைத் தேர்தல்: தேமுதிக வேட்பாளராக எல்.கே. சுதீஷ் போட்டி  

Estimated read time 1 min read

தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கு தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும், கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ல் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தேமுதிக-வுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு எல்.கே. சுதீஷ் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author