சீனத் தலைநகர் பெய்ஜிலிருந்து வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவுக்கு நேரடி விமான சேவை ஜூலை 10-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்த விமான சேவை வாரத்துக்கு 4 முறை இயக்கப்படுகின்றது.
மேலும் ஜூலை 15ஆம் நாள் முதல், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் பெய்ஜிங்கில் இருந்து டாக்காவிற்கு புதிய நேரடி வழித்தடத்தை அறிமுகப்படுத்தியது. சீனா சதர்ன் ஏர்லைன்ஸின் கூற்றுப்படி, இந்த சேவை வாரத்திற்கு இரண்டு முறை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய துணைக்கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வங்காளதேசம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியில் இணைந்த முதல் தெற்காசிய நாடு ஆகு திகழ்கின்றது. இது சர்வதேச ஒத்துழைப்பு மூலம் உலக இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சீனா மற்றும் வங்காளதேசம் இடையே ஆண்டுதோறும் 300,000 பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், சீனா மற்றும் வங்காளதேசம் இடையே பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
அடுத்த ஆண்டு இரு நாட்டுத் தூதாண்மை உறவின் 50ஆவது நிறைவு ஆண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.