சீன-கம்போடியா வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

Estimated read time 0 min read

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 26ஆம் நாள் பெய்ஜிங்கில், கம்போடியா நாட்டின் துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான புலாசோகுங்கையும் கம்போடியா துணை தலைமை அமைச்சர் சுன் ச்சேன்தோவையும் சந்தித்துரையாடினார்.

அப்போது வாங் யீ கூறுகையில்,

முன்னர் பல தலைமுறைகளாக தலைவர்கள் உருவாக்கிய இரு நாட்டு நட்புறவை சீனா பேணி மதிக்கின்றது. கம்போடியாவுடன் இணைந்து இரு நாட்டுறவைத் தொடர சீனா விரும்புகின்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்த மனிதகுல பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது பற்றிய முன்மொழிவுக்கும், 4 உலக முன்மொழிவுகளுக்கும் ஆதரவு அளித்த கம்போதியாவுக்கு சீனா பாராட்டு தெரிவித்தது.

சர்வதேச மற்றும் பிரதேச அலுவல்களில் கம்போடியாவுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, தெற்குலக கூட்டு நலனைப் பேணிக்காத்து, பிரதேச மற்றும் உலக அமைதி வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார்.

You May Also Like

More From Author