ரூ.100 கோடி மோசடி- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசக்குமார் கைது

Estimated read time 1 min read

ரூ.100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசக்குமார் கைது செய்யப்பட்டார்.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி செய்ததாக திமுகவை சேர்ந்தவரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவருமான பி.டி.அரசக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளின் அனுமதிக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக பி.டி.அரசக்குமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை அரசக்குமார் பெற்றுதந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகங்களிடம், பள்ளி அங்கீகாரம், தர உயர்வு, CMDA/DTCP அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், சென்னை CCB போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

You May Also Like

More From Author