தாய்நாட்டுக்குத் திரும்பிய ஹாங்காங்கின் வர்த்தகம் வளர்ச்சி

Estimated read time 1 min read

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம் தாய்நாட்டுக்குத் திரும்பிய 29 ஆண்டுகளில், சீனாவின் உள் பிரதேசங்களுக்கும் ஹாங்காங்கிற்குமிடையிலான வர்த்தக மதிப்பு, 1997ம் ஆண்டில் இருந்த 42 ஆயிரத்து 87 கோடி யுவானிலிருந்து, 2025ம் ஆண்டில் 2.6 இலட்சம் கோடிய யுவானாக உயர்ந்தது. ஆண்டின் சராசரி அதிகரிப்பு, 6.7 சதவீதமாகும் என்று சீனாவின் ஷன்ச்சேன் சுங்கத் துறை தெரிவித்தது.

இவ்வாண்டின் முதல் 5 திங்களில் சீன உள் பிரதேசங்களுக்கும் ஹாங்காங்கிற்குமிடையில் மேலும் நெருங்கி வரும் வர்த்தகத்துடன், ஏற்றுமதி இறக்குமதியின் மொத்த மதிப்பு 1.4 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 48.6 விழுக்காடு அதிகரித்தது. ஷன் ச்சேன் நுழைவாயில் மூலமான மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பில், இது 70 விழுக்காட்டை வகித்து, கடந்த ஆண்டை விட 58.7 விழுக்காடு அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

படம்:VCG

You May Also Like

More From Author