ஐரோப்பா தற்போது முன்னெப்போதும் இல்லாத கோடைக்காலத்தின் தொடக்ககால வெப்ப அலையை சந்தித்து வருகிறது.
ஜூன் 21 முதல் 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகளுக்கு இது காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “வெப்ப அழுத்தம் பெரும்பாலும் ‘மௌனக் கொலையாளி’ என்று அழைக்கப்படுகிறது” என எச்சரித்ததோடு, ஐரோப்பிய உள்கட்டமைப்பு இத்தகைய கடுமையான வெப்பநிலைகளைத் தாங்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இந்த வெப்ப அலை ஏற்கனவே ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் வெப்பநிலை சாதனைகளை முறியடித்துள்ளது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 1,300-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளது: WHO
