ஹாங்காங் தொழில் முனைவோர்களான பௌபேய்ஜிங், ஸியாஜிலியன் ஆகியோர் சீனாவின் நிங்போ நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி தனது அக்கறையையும் ஊக்கத்தையும் தெரிவித்தார்.
இக்கடிதத்தில் ஷிச்சின்பிங், சீனப் பாணி நவீனமயமாக்கலின் மூலம், வலுவான நாட்டின் கட்டுமானத்தையும் தேசிய மறுமலர்ச்சியையும் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கு சீன தேசத்தின் மக்கள் அனைவரும் கூட்டாகப் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், உங்களின் மேம்பட்ட நிலைகளைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து நாட்டின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பின் லட்சியத்தில் சேர்ந்து சீனப் பாணி நவீனமயமாக்கலின் கட்டுமானத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்றும், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்ற சீனக் கனவின் நனவாக்கத்துக்குப் புதிய பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.