சீன-தென்கொரிய தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய 2ஆவது கட்டத்தின் 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை 22 முதல் 26ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. எல்லை கடந்த சேவை வர்த்தகம், நிதி சேவை, சந்தை நுழைவுக்கான எதிர்மறை பட்டியல் ஆகிய பிரச்சினைகள் குறித்து இருதரப்பும் ஆழமாக விவாதித்து ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை பெற்றன. சீன-தென்கொரிய தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய 2ஆவது கட்டத்தின் பேச்சுவார்த்தை வெகுவிரைவில் முடிந்து, சீன-தென்கொரிய சேவை முதலீட்டு துறையின் திறப்பு அளவை விரிவாக்கி, இரு நாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் மேலதிக நலன்களை தர இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
