இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.4,000 கோடி என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்த நிலையில், திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும் ராவணனாக நடிக்கும் நடிகருமான யாஷ், ஆப் கி அதாலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த பட்ஜெட் சர்ச்சை குறித்துத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
இந்தத் தொகையானது படம் குறித்த தவறான புரிதலால் பரப்பப்பட்ட ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூ.4,000 கோடி பட்ஜெட்டா? ஹாலிவுட் கணக்கை உடைத்துப் பேசிய ராமாயணம் தயாரிப்பாளர் யாஷ்
