வறுமை ஒழிப்பில் சீனாவின் சாதனைகள் குறித்து ஸ்பெயின் ஊடகக் கட்டுரை

ஸ்பெயின் மன்டோ ஒப்ரெரோ என்ற இதழ் தனது இணையத்தளத்தில், சீனாவின் முறையான மற்றும் நெடுநோக்கு தன்மையுடைய வறுமை ஒழிப்பு பணியின் சாதனைகள் என்ற கட்டுரையை வெளியிட்டது. ஐ.நா வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் தரவுகளின்படி, உலகின் வறுமை குறைப்புப் பணிக்கு சீனா 70 விழுக்காட்டுப் பங்கு ஆற்றியுள்ளது. இப்பணியின் குறிக்கோள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே மனத்தில் பதிந்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இல்லா விட்டால், இவை அனைத்தையும் நனவாக்க முடியாது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

திட்டவட்டமான பகுதிகளில் வறுமைக்கான காணரங்களை சீனா துல்லியமாக அடையாளம் கண்டுள்ளது. பெருமளவு அடிப்படை வசதிகளில் முதலீடு செய்வதுடன், கல்வி மற்றும் தொழில் நுட்ப ஆதரவையும் அளித்து, பன்முகங்களிலும் கிராமப்புறங்களில் நீண்டகால வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையை சீனா வழங்கியுள்ளது என்றும் இக்கட்டுரையில் குடிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author