அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

Estimated read time 1 min read

புகழ்பெற்ற அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கான புனித யாத்திரை தொடங்கியது,

இன்று முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மொத்தம் 57 நாட்களுக்கு இந்த யாத்திரை நடைபெற உள்ளது. ரக்ஷா பந்தன் திருநாளில் இந்த ஆண்டுக்கான யாத்திரை நிறைவடைகிறது.

பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு முக்கிய வழித்தடங்கள் வழியாக இமயமலையில் உள்ள அமர்நாத் குகையை நோக்கி பக்தர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிக்காக அனைத்து பக்தர்களுக்கும் R.F.I.D. கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author