போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு 2026 FIFA உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவரது சகோதரி காடியா அவிரோ தகவலை வெளியிட்டுள்ளார்.
வட அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை தொடரே ரொனால்டோவின் ‘லாஸ்ட் டான்ஸ்’ எனப்படும் இறுதித் தொடராக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான நாக்-அவுட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஸ்போர்ட் டிவிக்கு அளித்த பேட்டியில் காடியா இந்த ரகசியத்தை உடைத்தார்.
நம்பகமான வட்டாரங்களில் இருந்து தமக்குக் கிடைத்த தகவலின்படி, ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து பயணம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும், ரசிகர்கள் இதனை இருக்கும் வரை கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2026 FIFA உலகக்கோப்பையுடன் சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
