சுதந்திரமும் திறப்பும் கொண்ட ஆசிய-பசிபிக் பிரதேசம் என்ற டகாயிச்சியின் கருத்து பற்றி சீனக் கருத்துக்கள்

சுதந்திரமும் திறப்பும் கொண்ட ஆசியா-பசிபிக் பிரதேசம் என்பதைக் கட்டியமைப்பதற்கான முக்கியத்துவத்தை, ஜப்பானியத் தலைமையமைச்சர் டகாயிச்சி தனது இந்தியப் பயணத்தின் போது மீண்டும் வலியுறுத்தினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 2ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், டகாயிச்சி சுதந்திரம் மற்றும் திறப்பு என்பதைச் சொல்லும் போதே, எதிர்ப்பு மற்றும் மோதல் என்ற கருத்தை மனதில் நினைத்திருப்பார் என்றார். மேலும், அவரின் பெயரில் மட்டும் சரியாக இருக்கும் இத்தகைய கருத்து, அமைதி, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிரதேச நாடுகளின் கூட்டு விருப்பதற்கு எதிராகச் செல்கிறது என்றும் தெரிவித்தார். அதோடு, ஆசியா-பசிபிக் பிரதேசத்துக்குத் தேவையானது பதற்றமல்ல, நிதானம் தான் என்று குறிப்பிட்ட குவோ ஜியாகுவான், ஆசிய-பசிபிக் பிரதேசம் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, பிரிவினைவாதம் அல்ல என்றும் கூறினார்.

You May Also Like

More From Author