போர்ப்ஸ் ஆலோசகர் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சிங்கப்பூர் நகரம், சுற்றுலாவாசிகளுக்கு பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம், தனிப்பட்ட பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு போன்ற ஏழு முக்கிய அளவுகோல்களைப் பயன்படுத்தி, உலகளவில் 60 நகரங்களை ஆய்வு செய்தது. ஒவ்வொரு நகரமும் 100-புள்ளி அளவில் மதிப்பிடப்பட்டது.
அதில் 100 மதிப்பெண் அதிக அபாயத்தைக் குறிக்கிறது.
ஆய்வின் இறுதியில் சிங்கப்பூர் பூஜ்ஜிய மதிப்பெண்களுடன் முதலிடத்தை பெற்றது. இது சுற்றுலாவாசிகளுக்கு மிகக் குறைந்த ஆபத்தைக் குறிக்கிறது.