பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார்..!

Estimated read time 1 min read

‘தி கேண்டிடேட்’, ‘ஆல் தி பிரசிடெண்ட்ஸ் மென்’ மற்றும் ‘தி வே வி வேர்’ போன்ற படங்களில் மூலம் உலகப்புகழ் பெற்றார் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட்.’ஆர்டினரி பீப்பிள்’ படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

ஹாலிவுட்டில் அவர் நடிகர், இயக்குனர் மற்றும் சுயாதீன சினிமாவின் காட்பாதர் என போற்றப்பட்டார். அவரது சக நடிகர்களில் ஜேன் போண்டா, மெரில் ஸ்ட்ரீப் மற்றும் டாம் குரூஸ் ஆகியோர் அடங்குவர்.

1969ம் ஆண்டு வெளியான ‘புட்ச் காசிடி அண்ட் தி சன்டான்ஸ் கிட்’ திரைப்படத்தில் நியூமனுக்கு ஜோடியாக ரெட்போர்ட் தந்திரமான குற்றவாளியாக நடித்தார். இது பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றது. 1973ம் ஆண்டின் சிறந்த படமான ஆஸ்கர் விருது பெற்ற ‘தி ஸ்டிங்’ படத்திலும் அவர் நியூமனுடன் இணைந்தார்.

மேலும் அவர் 1985ம் ஆண்டின் சிறந்த படமான ‘அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா’ படத்தில் நடித்தார். 2013ம் ஆண்டில் ‘ஆல் இஸ் லாஸ்ட்’ திரைப்படத்தில் கப்பல் விபத்துக்குள்ளான மாலுமியாக நடித்து பாராட்டைப் பெற்றார். அதில் அவர் படத்தின் ஒரே நடிகராக இருந்தார்.

2018ம் ஆண்டில், அவர் தனது பிரியாவிடை திரைப்படமான ‘தி ஓல்ட் மேன் அண்ட் தி கன்’ படம் பெறும் புகழை பெற்றது. 80 வயதில் தான் ஓய்வு பெறுவதற்கும் என் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.ரெட்போர்ட் தன் வாழ்க்கையில் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நான்கு குழந்தைகள்.

இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் ராபர்ட் ரெட்போர்ட், 89, இன்று காலமானார். அமெரிக்காவின் உட்டா மலையில் இருக்கும் சன்டான்ஸில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author