ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான கருத்துக்கணிப்பை சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் (CGTN), உலகின் 38 நாடுகளைச் சேர்ந்த 8,873 பேரிடம் நடத்தியது.
இதன்படி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சியில் சீனா மிகவும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி வருகிறது என்று 75.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இவ்வமைப்பைச் சேர்ந்த நாட்டினரில் சுமார் 85.2 விழுக்காட்டினர் இக்கருத்துகளை ஏற்றுக்கொண்டனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு சீனா மதிப்பு மற்றும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று 74.9 விழுக்காட்டினர் கருதுகின்றனர். இவ்வமைப்பைச் சேர்ந்த நாட்டினரில் சுமார் 85.8 விழுக்காட்டினர் இக்கருத்துகளை ஏற்றுக்கொண்டனர்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவின் மூலம், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம், மனித பண்பாடு உள்ளிட்டவையும், உயர் தர வளர்ச்சியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றும் 78.4 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். விசாரணைக்குள்ளாக்கப்பட்ட இவ்வமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களில் சுமார் 87.2 விழுக்காட்டினர் இக்கருத்துகளை ஏற்றுக்கொண்டனர்.