2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் எதிர்கால சான்றிதழில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தலைமை ஆசிரியர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், கைபேசி எண் போன்ற விவரங்களைத் தேர்வுத்துறை இணையதளத்தில் நவம்பர் 19 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, மாணவர்களின் நலன் கருதி, இந்த அவகாசம் நவம்பர் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
